world

img

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவம், வேதியியல்,  இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறையில் நோபல் பரிசுகள் கடந்த வாரம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.